// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** மகா சிவராத்திரி அகோரிகள் நடத்திய பூஜை !

மகா சிவராத்திரி அகோரிகள் நடத்திய பூஜை !

மகா சிவராத்திரியை முன்னிட்டு அரியமங்கலத்தில் அகோரிகள் நடத்திய சிறப்பு பூஜை

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோர காளி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் சிறப்பு யாகம் மற்றும் பூஜையில் ஈடுபட்டனர்.



திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்நிலையில்  மகாசிவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசி கொண்டு ஜெய் அகோர காளி மற்றும் ஜெய் அஷ்ட காலபைரவர் முன் அமைக்கப்பட்ட யாககுண்டத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.



யாகத்தின் போது நவதானியங்கள் பழங்கள் ஆகியவற்றை இட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து சங்கொலி எழுப்பியும் ஹர ஹர மஹாதேவ் என முழங்கி மகா தீபாரதனை நடைபெற்றது.

இதில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்கள், மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments