திருச்சி மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா - மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலையில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டனர்.
மொத்தம் 65 வார்டுகளில் திமுக உறுப்பினர்கள் 49, காங்கிரஸ் உறுப்பினர்கள் 5, அதிமுக உறுப்பினர்கள் 3, மதிமுக உறுப்பினர்கள் 2, விசிக உறுப்பினர்கள் 2, கம்யூனிஸ்ட் உறுப்பினர் 1, சுயேச்சை உறுப்பினர்கள் 2 ஆகியோர் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, மேயர், துணை மேயர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
0 Comments