// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** உலக தண்ணீர் தினம்..! பள்ளி மாணவர்களிடம் தண்ணீர் தினம் அனுசரிப்பு உறுதி மொழி

உலக தண்ணீர் தினம்..! பள்ளி மாணவர்களிடம் தண்ணீர் தினம் அனுசரிப்பு உறுதி மொழி

1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடித்தான் வருகிறோமே தவிர , தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்று வரை காணப்படவில்லை.

நீர் வளத்தைக் காப்பதும் அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

 உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.

இதுமட்டுமின்றி அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். 


தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.

தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.

உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். 

எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.

என்று  கூறியுடன், மாணவர்கள் மத்தியில் தண்ணீர் அவசியத்தை பற்றி  பாதகை ஏந்தி விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வுயிற்கு தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் தலைமையில் , தண்ணீர் அமைப்பு செயலாளரும் , பேராசிரியருமான கி.சதிஷ்குமார், நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா, ஜமால் முகமது கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வராஜ், எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை  ஆசிரியை திருமதி லதா பாலாஜி, புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தமிழ்த்துறை  தலைவர், இணைப் பேராசிரியர் முனைவர் சோம. ராஜேந்திரன் மற்றும் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.

Post a Comment

0 Comments