// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** திருச்சி குடிசை மாற்று வாரியத்தில் வீட்டிற்காக பணம் கட்டிய பொதுமக்கள் தர்ணா

திருச்சி குடிசை மாற்று வாரியத்தில் வீட்டிற்காக பணம் கட்டிய பொதுமக்கள் தர்ணா

திருச்சி அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது.

அந்த குடியிருப்புகளில் குடி இருப்பதற்காக வீடுகள் இல்லாத சுமார் 354 நபர்கள் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வீதம் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் அவர்களில் 144 பேருக்கு மட்டும் திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் மீதமுள்ள 240 பேர் தங்களிடம் பணம் வாங்கிவிட்டு வீடுகள் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று கூறி திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக காந்தி மார்க்கெட் போலீசார் ஏராளமானோர் பாலக்கரை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது;-

நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே பணத்தை செலுத்தியுள்ளோம். இருந்தபோதிலும் எங்களின் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வீடுகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ளவர்களுக்கு வீடுகள் தர அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள்.

இந்த நிலை தொடரக்கூடாது. எங்களால் எதுவும் செய்ய இயலாது என்று எண்ணி அநீதியை எங்களுக்கு தருகிறார்கள் .

இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்,மக்களுக்காக வேலை செய்யும் அதிகாரிகள் இதுபோன்ற வேலையில் ஈடுபடுவது தவறானது.

முறையாக தொகையை செலுத்தி உள்ள எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் கட்டாயம் வீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.

Post a Comment

0 Comments