// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் திருவோண மஹோத்ஸவ இசை நிகழ்ச்சி - ஏராளமான பொதுமக்கள் கேட்டு ரசித்தனர்.

திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் திருவோண மஹோத்ஸவ இசை நிகழ்ச்சி - ஏராளமான பொதுமக்கள் கேட்டு ரசித்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழச்சித்திர வீதியில் 61ஆம் ஆண்டாக திருவோண மஹோத்ஸ நிகழ்ச்சி ஸ்ரீனிவாசபக்தகோடிகள்  அமைப்பின் சார்பில் கடந்த 4ம்தேதி முதல் துவங்கி  வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று சாரா விஜயராகவன் புல்லாங்குழல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகாலட்சுமி வயலின்,  மிருதங்கத்தை கிரிதர சீனிவாசன் ஆகியோர் வாசித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள்  பங்கேற்று இசையை ரசித்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைப்பின் நிர்வாகி ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியை புது புது ரசிகர்கள் வந்து ரசிக்கின்றனர். பல, பல வித்துவான்கள் இங்கு வந்து நிகழ்ச்சியை நடத்தி தருகின்றனர்.


இந்த இடமும் துவராக மூலையில் வந்து உட்கார்ந்து நிகழ்ச்சி நடத்துகின்ற எந்த வித்வானாக இருந்தாலும் அவர்கள் சிகரத்தை தொடுகிறார்கள் என்பது அனுபவபூர்வமாக உண்மை.இந்த 61ஆம் ஆண்டு நிகழ்வில் புல்லாங்குழல் சாராவிஜயராகவன் புல்லாங்குழல் என்றார்







தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மோகன் கூறுகையில்...இன்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் சாரதா விஜயராகவன் மூன்று தலைமுறையாக இசையில் வளர்ந்து வருகின்றனர்.இவருடைய தாத்தா சடகோபன் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர் வீணை வாசிப்பார். இந்த நிகழ்வு கடந்த மூன்று தலைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments