// NEWS UPDATE *** த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் *** ரெயில்வே லோகோ பைலட் உள்ளிட்டவர்களுக்கு அலவன்ஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் - எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் திருச்சியில் பேட்டி

ரெயில்வே லோகோ பைலட் உள்ளிட்டவர்களுக்கு அலவன்ஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் - எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் திருச்சியில் பேட்டி

ரெயில்வே லோகோ பைலட் உள்ளிட்டவர்களுக்கு அலவன்ஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் - எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் திருச்சியில் பேட்டி

எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் :


ரெயில்வேயில் பணிபுரியும் லோகோ பைலட், கார்ட் (Guards) உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் கிலோ மீட்டர் அலவன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அலவன்ஸ்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதை நிதி நிலையை காரணம் காட்டி ரெயில்வே துறை அந்த அலவன்ஸ்களை நிறுத்தி உள்ளது. இதனையடுத்து எஸ்.ஆர்.எம்.யூ நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அதில் கிலோ மீட்டர் அலவன்ஸ் மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற அலவன்ஸ்களையும் உடனடியாக நிறுத்தாமல் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வர மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.


ரெயில்வே துறை என்பது சேவையுடன் வழங்க கூடிய பொதுத்துறை நிறுவனம். இது லாபத்தையும் தரும் நிறுவனம். ஆனால் நிதி நிலையை காரணம் காட்டி அலவன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே ரெயில்வே துறையில் காலிபணியிடஙகள் நிரப்பபடாமல் இருக்கும் நிலையில் தற்போது ரயில்வே ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு இடையே பணியாற்றி வருகின்றனர் இந்த சூழலில் அவர்களுக்கான அலவன்ஸை நிறுத்தாமல் முறையாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர் எம் யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Post a Comment

0 Comments