திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவரது மகன் ராஜா அயினாம் பிள்ளை (வயது 65) இவர் ,இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்கள் 18 பேருக்கும் சொந்தமாக திருச்சி, கே.சாத்தனூரில் 0.88.சென்ட் நிலம் உள்ளது.எனது சொத்தில் சுற்றுச்சுவர் அமைத்து ஈஷா பார்ம் ஹவுஸ்' என்ற பண்ணை வீடு அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறேன். என் பெயரில் அதற்கான கேஸ் பில். வங்கி பாஸ்புக் ஆகியவை உள்ளது.
எனது நிலமருகே சபரி மில்ஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் சீத்தாராம், செந்தமிழ்செல்வன் மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் ஊழியரான ராமநாதன் ஆகியோர் எனது பண்ணை வீட்டினை அபகரிக்க திட்டமிட்டு பலமுறை அத்துமீறி உள்ளே நுழைந்தனர். எனவே நான் அந்த நிறுவனத்தின் மீது திருச்சி 3ம் கூடுதல் முன்சிப் நீதிமன்றத்தில் OS No.374/2025 என்ற நிரந்தர உறுத்துக்கட்டளைவ வழக்கு தொடுத்து நடத்தி வருகிறேன்.
நான் உடனடியாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.கடந்த23.09.2025ம் தேதி அதிகாலை சுமார் 30 ரவுடிகள் சீத்தாராமன், செந்தமிழ்செல்வன். ராமநாதன் ஆகியோரின் கட்டளைப்படி எனது பண்ணை வீட்டிற்குள் கடப்பாறை, சம்பட்டி, கத்தி போன்று ஆயுதங்களுடன் ஏறி குதித்து எனது வாட்ச்மேன் தனபாலை தாக்கி அவரது செல்போனை பிடுங்கிக்கொண்டுஆபாச வார்த்தைகளால் திட்டி,கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரை அடித்து, கம்பத்தில் கட்டிவைத்துவிட்டு எனது பண்ணை வீட்டின் சுமார் ரூ.4,00,000/- மதிப்புள்ள சுற்றுச்சுவரை கடப்பாறை. சம்பட்டி கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர்
மேலும் எனது பண்ணை வீட்டின் நடுவே அமைத்துள்ள கண்டைனர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த எனது அசல் ஆவண எண்கள் 1691/1950, 3509/1964, எனது ஆதார் கார்டு, ரூ.20,000/- ரொக்கம் ஆகியற்றை திருடிக் கொண்டு கருப்பு நிற ஹுண்டாய் கிரெடா காரில்
தப்பி ஓடிவிட்டனர். நான் இதுகுறித்து கே கே நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே மேற்படி சீத்தாராமன், செந்தமிழ்செல்வன், ராமநாதன் ஆகியோரினால் எனது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே சீத்தாராமன், செந்தமிழ்செல்வன், ராமநாதன் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து பேட்டி அளித்த அவரது வழக்கறிஞர் கூறுகையில், காவல்துறையினர் எங்கள் தரப்பு புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர்.
நிலம் எங்கள் தரப்பிற்கு உரியது என்பதற்கான சான்று தாசில்தார் வழங்கியுள்ளார்.
ஆனாலும் நிலத்தை அபகரிக்கும் நோக்குகடன் செயல்படும் எதிர் தரப்பினர் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
0 Comments