// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா!

திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா!

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க முப்பெரும் விழா  திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க குளிர்மை அரங்கில் நடைபெற்றது. செயலர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்றார்.தகைசால் தமிழர் நல்லக்கண்ணு நினைவேந்தல் நிகழ்விற்கு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்புத் தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் முகமது ஷபி,நரம்பியல் மருத்துவர் அலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தலைவர் த.இந்திரஜித், பொதுச் செயலாளர் ஜவஹர் ஆறுமுகம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கவிஞர் வீ.கோவிந்தசாமி, ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.‌

சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் திருச்சி மாவட்ட நாற்பது பெண் எழுத்தாளர்கள் வாழ்க்கை வரலாற்றை தொகுத்த திருச்சி பெண் எழுத்தாளர்கள்  எனும் நூலினை பத்மஶ்ரீ சுப்புராமன் வெளியிட மெர்சி டயானா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து    தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற  யோகா ஆசிரியர் விஜயகுமார் மனிதநேய பணியினைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.‌ 

இரண்டாவது அமர்வில்  சர்வதேச பெண்கள் தினம் முனைவர் சங்கரி சந்தானம் தலைமையில்‌ நடைபெற்றது. 

 முனைவர் சாத்தம்மைப்‌ பிரியா , மேனாள் வட்டாரக் கல்வி அலுவலர் இரா.ஜெயலட்சுமி  உரையாற்றினர். எழுவாய் பெண்ணே எனும் கவியரங்கத்திற்கு

கவிஞர் கவி செல்வா

தலைமை வகித்தார். வையத் தலைமை கொள் தலைப்பில் கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், அறிவை விழுங்கு தலைப்பில் கவிஞர் மாறன் மகா, சிறகை விரி தலைப்பில் கவிஞர் த.கமலி, வானம் தொடு தலைப்பில் கவிஞர் ஜோ.காயத்ரி ஆகியோர் கவியரங்கில் பங்கேற்று உரையாற்றினர்.நிறைவாக திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூலாசிரியரும்,

 சங்க செயலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார் . தமிழ் ஆசிரியர் செசிலி , எழுத்தாளர் சித்ரா குபேர சம்பத், எழுத்தாளர் கிரேஸ் பரிமளா, நல்லாசிரியர் மும்தாஜ் பேகம்,  சிறார் எழுத்தாளர் ஹாசினி, முனைவர் அருணாச்சலம், நன்மாறன், லால்குடி முருகானந்தம், வழக்கறிஞர் சேகர், கண்மணி ராஜா முகமது, கவிஞர் ஆங்கரை பைரவி, கவிஞர் மகிழை பெனடிக்ட் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments