முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள "வீ தி லீடர்ஸ்" இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை பணிகள், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
‘Clean and Sustainable Tamil Nadu’ என்ற தற்போதைய இயக்கப் பிரசாரத்தின் கீழ், மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் வயலூர் ரோடு, சண்முகா நகர் பகுதியில், தன்னார்வலர் சுரேஷ் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர்.
மேலும், "வீ தி லீடர்ஸ்" இயக்கத்தில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து இணைந்து வருவதுடன், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் அவர்கள் நேரடியாக பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியிலும் இதுபோன்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.





0 Comments