திருச்சி கலையரங்கில் கிரடாய் அமைப்பு (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) சார்பில் 11வது ஆண்டு பேர்புரோ–2026 அடுக்குமாடி குடியிருப்புகள் கண்காட்சியை அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார்.
வரும் செப்.27 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 32 கட்டுமான நிறுவனங்கள், ஸ்டேட் பாங்க் உட்பட 4 வங்கிகள் மற்றும் வீடுகளுக்கான கதவுகள், உள் அலங்காரம், எலக்ட்ரிக்கல், கம்பி வகைகள் நிறுவனங்களின் மொத்தம் 48 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது. கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு வெவ்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. ரூ. 30 லட்சம் முதல் 6 கோடி வரையிலான மதிப்பீட்டில் உடன் குடிபுகும் நிலையிலும், இன்னும் சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் அடுக்கு மாடி வீடு, தனி வீடு மற்றும் வீட்டு மனைகள் உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கண்காட்சியை அனைவரும் இலவசமாக பார்த்து மகிழலாம்.
இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை எம்எல்ஏ கதிரவன், தமிழ்நாடு கிரடாய் துணை தலைவர் கோபிநாதன், மொரைஸ் குரூப் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் லெரொன் மொராய்ஸ், பாரத ஸ்டேட் வங்கி சென்னை சர்க்கிள் பொது மேலாளர் சஞ்சீவ் குமார், திருச்சி துணை பொது மேலாளர் சந்தீப் குமார் நாயக், பஞ்சாப் நேஷனல் வங்கி சர்க்கிள் ஹெட் ராஜூவ்குமார் சின்ஹா, ஹச்டிஎப்சி வங்கி துணை உதவி தலைவர் பாலமுரளி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
திருச்சி ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் ரேணுகா, இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் பழனிக்குமார், திருச்சி கிரடாய் சேர்மன் மனோகரன், தலைவர் நசுருதீன், பேர்புரோ கண்காட்சி சேர்மன் இளமுருகன், திருச்சி கிரடாய் செயலாளர் முகமது இப்ராஹிம், பொருளாளர் கார்த்திக், கண்காட்சி கமிட்டி செயலாளர் அலாவுதீன் மற்றும் கிராடாய் ஆலோசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






0 Comments