லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சி விஷன் புதிய சங்கம் உருவாக ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கிய தாய் சங்கமான ராயல் லயன்ஸ் சங்கத்திற்கு, சர்வதேச லயன்ஸ் சங்கத்தின் சங்க விரிவாக்க (Extension) முத்திரை வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
விழாவிற்கு லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தின் சாசனத் தலைவர் லயன் ஹேமலதா தலைமை வகித்தார். சாசனச் செயலர் லயன் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாசனப் பொருளாளர் லயன் முகமது ஹயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் மாவட்டம் 3242F – வட்டாரம் 1A தலைவர் லயன் சரவணன், திருச்சிராப்பள்ளி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த லயன் பிரபுகுமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.ஒரு புதிய லயன்ஸ் சங்கம் உருவாக தாய் சங்கம் வழங்கும் வழிகாட்டுதல், உறுப்பினர் சேர்ப்பு, அமைப்பு உருவாக்கம் மற்றும் தொடக்கப் பணிகளுக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் Extension முத்திரை வழங்கப்படுகிறது. இது லயன்ஸ் சேவை இயக்கத்தை புதிய சங்கங்களின் மூலம் விரிவுபடுத்துவதில் தாய் சங்கம் ஆற்றிய பங்களிப்பைச் சிறப்பிக்கும் முக்கியமான அங்கீகாரமாகும்.
நிகழ்வில் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தின் சாசனத் தலைவர் லயன் ஹேமலதா, சாசனச் செயலர் லயன் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாசனப் பொருளாளர் லயன் முகமது ஹயாஸ், வட்டார தலைவர் சரவணன்,திருச்சிராப்பள்ளி ஹோஸ்ட் லயன் பிரபுகுமார் ஆகியோர் , ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசனத் தலைவரும் மண்டலம்–1 தலைவருமான லயன் முகமது சபியிடம் சங்க விரிவாக்க முத்திரையை வழங்கினர்.லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கம் உருவாக ராயல் லயன்ஸ் சங்கம் வழங்கிய ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்புக்கு விஷன் லயன்ஸ் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 49,000-க்கும் மேற்பட்ட லயன்ஸ் சங்கங்கள்,1.4 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பில் சேவை செய்யும் ஒரு குடும்பத்தின் அங்கமாக இணைத்து கொண்டன.
புதிய சங்கத்தின் வளர்ச்சியிலும், சமூக சேவைத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பதிலும் தாய் சங்கத்தின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.நிகழ்வில் லயன் கணேசன், லயன் சுதாகர், லயன் மகேஸ்வரி, லயன் கந்தசாமி, லயன் விக்னேஷ், லயன் திரவிய கிளாடினா, லயன் ராகவேந்திரன், லயன் ஆனந்த கிருஷ்ணன், லயன் ஹரிபிரசாத் உள்ளிட்ட லயன்ஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

0 Comments