// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருவாரூர் டாஸ்மாக் மதுபான கடைகளில் மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் வசூலிக்கும் பெண் அதிகாரி: குமுறும் பணியாளர்கள்

திருவாரூர் டாஸ்மாக் மதுபான கடைகளில் மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் வசூலிக்கும் பெண் அதிகாரி: குமுறும் பணியாளர்கள்

திருவாரூர்:

டாஸ்மாக் பெண் அதிகாரி மாதமாதம் 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் கட்டாய வசூல் செய்து புகார் எழுந்துள்ளது.திருவாரூரில் டாஸ்மாக் கணக்கு உதவி மேலாளராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் 100 மேற்பட்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.



ஒவ்வொரு கடைக்கும்  மாதந்தோறும் ரூ.1000  கொடுக்க வேண்டும் என கணக்கு உதவி மேலாளர் அனைத்து டாஸ்மார்க் மறைமுகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் இதைப்பற்றி புகார் மனு முது நிலை மண்டல மேலாளர் 

தமிழ்நாடு வாணிப கழகம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திருச்சிக்கு அனுப்பி உள்ளனர்.

2உயர்திரு மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு வாணிப கழகம் தலைமை அலுவலகம் சென்னை. 

பொது மேலாளர் தமிழ்நாடு வாணிப கழகம் சென்னை ஆகியோருக்கு புகார் அளித்து 3 மாதம் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை

இதனால் திருவாரூரில் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் ஒவ்வொரு மாதமும்  சம்பளத்திலிருந்து 1000 ரூபாய் கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


மன்னார்குடி தாலுகா மாதவன், திருத்துறைப்பூண்டி தாலுக்கா ராஜா, முத்துப்பேட்டை ராஜசேகர், நன்னிலம் சுந்தர்ராஜன், கெளதம், வலங்கைமான் ராமு, நீடா மங்கலம் பாலு, கொறடாச்சேரி சுப்பிரமணி போன்றவகள் மூலமாக இந்த வசூல் நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இவர்களிடம் விசாரணை பண்ணினால் தெரியும். மாதம் கடைக்கு ரூ. 1000 உதவி கணக்கு மேலாளருக்கு வசூல் பண்ணி தருகிறார்களா என்பது தெரியவரும் என்று டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


எனவே அந்தப் பெண் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments