// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த திருச்சியை சேர்ந்த பாடலாசிரியர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த திருச்சியை சேர்ந்த பாடலாசிரியர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

உக்ரைன் - ரஷ்ய போரை உடனடியாக நிறுத்த வேண்டும் ... உலகம் முழுவதும் ஒற்றுமை தலைத்தோங்க வேண்டும் என்கிற கருத்துகளை மையமாக வைத்து திருச்சியை சேர்ந்த பாடலாசிரியர் ஒருவர்  வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ பலரது கனவத்தை ஈர்த்துள்ளது.


கடந்த 25 நாட்களாக உலகையே உலுக்கி வரும் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் அந்த இரு நாடுகளுக்கு மட்டும் அல்லாது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பெரும் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா உடனடியாக போரை நிறுத்திவிட்டு தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மையப்படுத்தி "யுத்தம் வேண்டாம்" என்கிற தலைப்பில் திருச்சியை சேர்ந்த பாடலாசிரியர் ராஜ் குமார் யூ - டியூபில் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
இது குறித்து திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்தால் மூன்றாம் உலகப்போரை உருவாக்க வழிவகை செய்யும் என்பதை தாண்டி உண்ண உணவு கூட இல்லாமல் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் தவிக்கும் நிலை வந்துவிடும் என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்.


Post a Comment

0 Comments