கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் அமைந்துள்ள பழைய பள்ளி திருத்தலத்தில் நடைபெற்ற சமபந்தி விழாவில் சுமார் 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் பெரும் திரளாக ஒற்றுமையுடன் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் அமைந்துள்ள பழைய பள்ளி திருத்தலமானது, பள்ளியப்பன் எனும் உருவமில்லாத கடவுள் உள்ள புனித தலமாகும்.சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் ஹிந்துக்கள் திருவிளக்கேற்றியும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும் முஸ்லீம்கள் சாம்பிராணி பத்தி ஏற்றியும் வணங்குவது வழக்கம்.
இங்கு ஆண்டுக்கொரு முறை மார்ச் மாதம் மூன்றாம் திங்கள்கிழமை, மும்மத மக்களும் இணைந்து சர்வமத பிரார்த்தனை, சமபந்தி விருந்து போன்ற நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமான விழாக்கள் போல அல்லாமல் இங்கு மும்மத மக்களும் காணிக்கையாக வழங்கிய அரிசி, காய்கறி போன்றவற்றால் மும்மதங்களை சார்ந்த அந்த வட்டார மக்களால் சமைக்கப்பட்டு மறுநாள் மதியம் முதல் மாலை வரை சமபந்தி விருந்தாக உணவு பரிமாறப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சர்வமத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து விழா இன்று நடைபெற்றது. சுமார் 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் பெரும் திரளாக ஒற்றுமையுடன் கலந்து கொண்டனர்.இதில் ஏரளமான பள்ளி மாணவ - மாணவிகள் வந்து சமபந்தி விழாவில் கலந்து கொண்டனர்.
0 Comments