// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** சவூதியில் இறந்தவரின் உடலை எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

சவூதியில் இறந்தவரின் உடலை எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

சவூதி அரேபியா ரியாத் பகுதியில் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் உலகியநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் ஆறுமுகம் (50), மனைவியின் பெயர் வசந்தா இவர்களுக்கு 3 மகள்கள் 1 மகன் உள்ளனர். ஆறுமுகம் என்பவர் ரியாத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில் ஜனவரி மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். 

வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவருடைய உறவினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். உடனே எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் ரியாத்தில் உள்ள இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி செய்யும்மாறு கேட்டு கொண்டனர்.

சோசியல் ஃபோரம் நிர்வாகிகள் எடுத்த தொடர் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த ஆறுமுகம் உடலை தாயகத்திற்கு 2022 மார்ச் 23ம் தேதி திருச்சி வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். திருச்சி தெற்கு  மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத் அவர்களின் தலைமையில், SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கலீல் அவர்களும், கேகே நகர் கிளை தலைவர் இம்தியாஸ் அவர்களும், சுப்பிரமணியபுரம் கிளை தலைவர் PKM பாஷா அவர்களும், ஏர்போர்ட் கிளை ரபிக் மற்றும் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் இன்று காலை திருச்சி விமான நிலையம் சென்று இறந்த ஆறுமுகம் உடலை பெற்று அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவரின் உடலை குடும்பத்தாரிடம்  ஒப்படைத்தனர்.

 

துரிதமாக செயல்பட்டு இறந்த உடலை தாயகம் அனுப்ப உதவி செய்த இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகளுக்கும், SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கும் ஆறுமுகம் அவர்களின் குடும்பத்தார் தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.

Post a Comment

0 Comments