// NEWS UPDATE *** "இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி *** திருச்சி ராணுவ கேண்டீனில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து - முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி ராணுவ கேண்டீனில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து - முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி கண்டோன்மென்ட் அருகே கோல்டன் பால்ம் மில்ட்டரி கேண்டீன் செயல்பட்டு வருகிறது -  திருச்சி,தேனி,திண்டுக்கல் நாமக்கல்,தஞ்சாவூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவப் படை வீரர்கள் இந்த கேண்டீனில் இராணுவ துறையின் கீழ் வழங்கும் பொருட்களை பெற்று பலனடைந்து வருகின்றனர்.


ஆனால் இந்த கேண்டீனில் சில ஊழியர்கள் மேலாளரின்  உதவியுடன் கடந்த பல வருடங்களாக ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும்,குறிப்பாக கேண்டீனில் உள்ள உணவுப்பொருட்களை வெளி சந்தையில் விற்று பலன் அடைந்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளது. 


இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - ஓய்வுபெற்ற ராணுவ படை வீரர்களுக்கு வழங்கும் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ராணுவ படை வீரர்கள் 200க்கும் அதிகமானோர் திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ கேண்டீன் முன்பாக கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது  பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments