// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி திருவெறும்பூர் தேனேரிப்பட்டி அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இக்கூட்டம் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை  வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை விழிப்புணர்வு கூட்டத்திற்கு பெற்றோர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு பள்ளி மேலாண்மை குழு பற்றியும் அதன் பணிகள் பற்றியும்  பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு

ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற பள்ளி மேலாண்மை தேர்வு கூட்டத்தின் நடைமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.



கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்ற 250க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்பள்ளி முன்னேற்றத்திற்கு தங்கள் பங்களிப்பை உறுதி செய்தனர் இந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சந்திரசேகர்  தலைமை வகித்தார். 

இதில் பழங்கனாங்குடி பஞ்சாயத்து தலைவர் பன்னீர்செல்வம்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்லத்துரை, திருவெறும்பூர் ஒன்றிய துணைத் தலைவர் பரமசிவம்

மற்றும் அசூர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments