திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு 100 அடி சாலை பகுதியை சேர்ந்தவர் ஜாகித் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் ஜாகித் இன்று காலை வழக்கம்போல் கடையை திறந்துள்ளார் அப்போது கடைக்குள் சுமார் 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு இருந்துள்ளது.
இதனை பார்த்து பயந்து போன ஜாகித் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் நவல்பட்டு தீயணைப்பு வீரர் மோகன் குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்ப துறையினர் சாரைப் பாம்பை பிடித்து சாக்குப் பைக்குள் அடைத்து வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்..கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
0 Comments