// NEWS UPDATE *** தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவு கடிதத்தை வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.. *** கர்நாடகாவின் ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவின் ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிவதை  தடை விதித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் ஹிஜாப் அணிவதை கர்நாடக நீதிமன்றம் தடையை கண்டித்து தேசிய தவ்ஹீத் ஜமாத்  கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஆல்பா நசீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையை பொதுச்செயலாளர் அலாவுதீன் வழங்கினார்


ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் இப்ராஹிம், சம்சுதீன், நிசார்முஸ்தாபா, அப்பாஸ், ரபிஅகமது மற்றும் பெண்கள் குழந்தைகள் ,நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கர்நாடகாவின் உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமியருக்கு விரோதமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை கண்டித்து கோஷமிட்டனர்.


Post a Comment

0 Comments