கர்நாடகா கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சென்னை ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்துள்ளனர்...
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிய இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும் பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது... கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஆவடியில் இருக்கக்கூடிய தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று மதியம் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்புக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் கண்டன பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில் கர்நாடகா கல்வி நிறுவனங்களில் பணியை மாநில அரசு விதித்துள்ள தடை வாபஸ் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தும் என தெரிவித்துள்ளனர்
0 Comments