BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** தமிழக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய சட்ட நடவடிக்கை குழு கோரிக்கை..! இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த திட்டம்

தமிழக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய சட்ட நடவடிக்கை குழு கோரிக்கை..! இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த திட்டம்

தமிழக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய சட்ட நடவடிக்கை குழு கோரிக்கை 

முஸ்லீம்  சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி  கையழுத்து  இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.


தற்போது 1லட்சம் கையெழுத்து பெறப்பட்டு தொடர்ந்து இயக்கம் நடைபெற்று வருகிறது. 

இந்த கையெழுத்து இயக்கமானது  விரைவில் தமிழக முதல்வருக்கு சந்திக்க உள்ளோம்

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆதிநாதன் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.



 40க்கு மேற்பட்டவர்கள் சிறையில் 20ஆண்டுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

வருடம் தோறும் செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். அப்படி  செய்யப்படக் கூடும் என்ற நிலையில் அந்த நடவடிக்கையானது கால தாமதமாகி வருகிறது.

 

சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாது கடந்த 20 ஆண்டு கோரிக்கையாக இருந்து வருகிறது. 


சிறை கைதிகள் விடுதலையால்  பிரச்சனை என பாசிச தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் எந்த பிரச்சனையும் வராது 

எங்கள் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய கைதிகளை விடுதலை தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கம், மதகுருமார்கள், ஜமாத்தார்கள் தொடர்ந்து தங்களது

கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட நீதி அரசர் ஆதிநாதன் குழு விரைந்து 

விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட  வரவேண்டும் என்பது  எங்களது முக்கிய கோரிக்கையாக முன்வைத்து வைத்துள்ளோம் என தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில்

தமிழகத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இஸ்லாமிய அமைப்பினருக்கு ஒரு மேயர், துணை மேயர் கூட வழங்கப்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் இதை கருத்தில் கொண்டு மேயர் துணை, மேயர் தர வேண்டும் என கூறினார்.


இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலையில் தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கவில்லை என்றால் தமிழக அளவில் இஸ்லாமிய அமைப்புக்கள்  ஒன்றிணைந்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments