BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** புதுக்கோட்டை அன்னவாசலில் திமுக-அதிமுக இடையே மோதல்..! போலீஸ் தடியடி

புதுக்கோட்டை அன்னவாசலில் திமுக-அதிமுக இடையே மோதல்..! போலீஸ் தடியடி

 தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் கடந்த 22ம் தேதி நடந்து முடிவடைந்தது.


அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் 6 வார்டுகளிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் அதிமுகவை சேர்ந்த வார்டு உறுப்பினர்களை தங்களுக்கு ஆதரவாக திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து காவல்துறை பாதுகாப்பை கோரி இருந்தனர். அந்த வகையில் அன்னவாசல் பேரூராட்சி முன்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் நூற்றுக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.


இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் திமுகவினர் மட்டும் உள்ளே நுழைய முயற்சி செய்ததால் சில அதிமுகவினர் திமுக மற்றும் காவல்துறை அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டனர்.



மதுரை உயர் நீதிமன்றம் அதிமுக வார்டு உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்ததால் அதிகாலை 6 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் அதிமுக வார்டு உறுப்பினர்களை காவல்துறையினர் உள்ளே அனுப்பி இருந்தனர்.


இந்நிலையில் திமுகவை சேர்ந்தவர்கள் எப்படி அதிமுக உறுப்பினர்களை அதிகாலையில் உள்ளே விட்டு அடைக்கலாம் - இந்த தேர்தல் நடைபெறக் கூடாது அதிமுகவினருக்கு சாதகமாக காவல்துறையினர் உள்ளனர் என்று முழக்கமிட்டனர் - சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேரூராட்சி அலுவலகம் முன்பாக திரண்டிருந்த திமுகவினர் தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர், ஒரு கட்டத்தில் காவல்துறையினர் மீது கற்களை வீசியதால், திமுகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தும் சூழல் உருவானது.

இதில் திமுக பிரமுகர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே போல் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தடியடி நடத்தி கூட்டத்தை காவல்துறையினர் கழித்த பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வைரமுத்து ராஜா உள்ளிட்டோர் நேரில் வந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

காவல்துறையினர் அத்துமீறி தடியடி நடத்தி திமுகவினர் மீது தாக்குதல் நடத்தி இருந்தால் உரிய விசாரணை நடத்தி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுகவினரிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் அதிமுக வேட்பாளர் சாலை பொன்னம்மாள் போட்டியின்றி அன்னவாசல் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



Post a Comment

0 Comments