மார்ச் 8 ஆம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்படபடுகிறது..இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், மகளிர் சுய உதவி குழு ஆகிய பகுதிகளில் பெண்கள் தினத்தை பெருமைபடுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ,விழாக்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி அருகே மாத்தூர் பகுதியில் மகளிர் சுய உதவி குழு சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரை செய்தார்
0 Comments