NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** SDPI கட்சி பெண்கள் அமைப்பு விமன் இந்தியா சார்பில் மகளிர் தின கருத்தரங்கு

SDPI கட்சி பெண்கள் அமைப்பு விமன் இந்தியா சார்பில் மகளிர் தின கருத்தரங்கு

விமன்ஸ் இந்தியா முவ்மெண்ட் சார்பாக திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி, தென்னூர், குத்பிஷா நகரில் மகளிர் தின கருத்தரங்கம் இன்று  நடைபெற்றது. இந்த நிகழ்வில் WIM நிர்வாகி  சமீனா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். Wim திருச்சி மாவட்ட தலைவர் மூமினா பேகம் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். Wim மாவட்ட பொதுச்செயலாளர் தௌலத்  நிஷா, முன்னிலை வகித்தார். 



இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம் அப்துல்லாஹ் ஹஸ்ஸான்பைஜி கலந்து கொண்டு பாசிசத்தை தோற்கடிப்போம் பெண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் திருச்சி நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்  சாந்தி அவர்கள் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வையும் பெண்கள் பாதுகாப்பையும் பற்றி உரை நிகழ்தினார். 

மேலும் எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ,wim நிர்வாகிகள்,பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியாக விம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜுவைரியா நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0 Comments