வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாகப்பட்டினம் மற்றும் வாஸ்கோடாகாமா வாஸ்கோடகாமா மற்றும் நாகப்பட்டினம் இடையே வாராந்திர ரயில், எண்.17315/17316 இயக்கப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது:-
ரயில் எண். 17315 வாஸ்கோடகாமா - நாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் வாஸ்கோடகாமாவில் இருந்து திங்கட்கிழமைகளில் காலை 09.00 மணிக்குப் புறப்பட்டு செவ்வாய்கிழமைகளில் 11.40 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும். திரும்பும் திசையில், ரயில் எண். 17316 நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா வாராந்திர எக்ஸ்பிரஸ் நாகப்பட்டினத்தில் இருந்து புதன்கிழமைகளில் 00.20 மணிக்குப் புறப்பட்டு, வியாழன் கிழமைகளில் 03.25 மணிக்கு வாஸ்கோடகாமாவைச் சென்றடையும். மேற்கூறிய இரண்டு ரயில் சேவைகள், ரயில் எண். 17315 / 17316 வாஸ்கோடகாமா - நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா தற்போது நாகப்பட்டினம் வரை இயக்கப்பட்டு, வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படும். வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இந்த ரயிலில் ஒரு ஏசி டூ டயர் கோச், நான்கு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், ஏழு ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சுகள், நான்கு ஜெனரல் செகண்ட் கிளாஸ் கோச்சுகள் மற்றும் இரண்டு லக்கேஜ் கம் பிரேக் வேன்கள்
0 Comments