வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 39 வது வணிகர்கள் விடியல் மாநில மாநாடு நடை பெறுவதாகவும் நடைபெறுவதாகவும் அதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா பேட்டி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சேலம் மண்டல தலைவர் எஸ் வைத்தியலிங்கம் தலைமை வகித்தார் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் வரவேற்றுப் பேசினார் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது வரும் மே 5 ஆம் தேதி வணிகர்களின் 39 வது விடியல் மாநில மாநாடு
திருச்சி மாநகரில் நடைபெற உள்ளதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையிலான குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் இதில் பல லட்சக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த மாநாட்டில் வனிகரகளுக்கான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட இருப்பதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்த விக்கிரமராஜா இந்த மாநாடு வணிகர்கள் பிரச்சனைகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைய இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார் மேலும் நாமக்கல்லில் உள்ள பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க அரசு சார்பாக கருத்துரு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் இந்த நாமக்கல் பேருந்து நிலையத்தை மாற்றி அமைக்கின்ற விஷயத்தில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் வணிகர்களை கலந்தாலோசித்து அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அது வணிகர்களை பாதிக்கின்ற வகையில் அமையும் என்ற விஷயத்தை அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவிப்பதாகவும் அப்போது விக்கிரமராஜா தெரிவித்தார் மேலும் தற்போது உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தங்களது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பேரவை கருத்துகளை அவர் மேலும் தெரிவித்தார், மேலும் சேலம் மண்டல பொதுக்குழு கூட்டத்தில் வரும் மே மாதம் 5 ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநில மாநாட்டுக்கு திரளாக வணிகர்களை அழைத்து வருவது, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உணவு வசதி, இருப்பது குறித்தும் இன்னும் பல்வேறு ஏற்பாடுகள் குறித்தும் அங்கு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டஇருக்கும் பல்வேறு தீர்மானங்கள் குறித்தும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது இதில் இதில் சேலம் தருமபுரி நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments