NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** வரி உயர்வை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டம்

வரி உயர்வை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்து திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வீட்டு வரி உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக, புதிய தமிழகம் உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.....

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் எம்.எச்.ராஜா, பெரம்பலூர் பார்வையாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கௌதம், சீனிவாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Post a Comment

0 Comments