// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

 திருச்சி மாவட்டம் விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக இன்று தர்கா பகுதியில் மாபெரும்  மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் மூமினா பேகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விம் பொதுச் செயலாளர் தெளலத் நிஷா அவர்கள் வரவேற்புரையாற்றினார்

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருச்சி மண்டல தலைவர் இமாம்.அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் NWF மாவட்ட செயலாளர் ரமீசா பானு,தர்கா கிளையின் விம் தலைவர் ரபியா பேகம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சித்திக் முகமது,கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா,மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ், தர்கா கிளை செயலாளர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள்,பெண்கள்,குழந்தைகள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments