திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீபாதுகா அரங்கில் செயலரும் தாளாளருமான வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் இளநிலை முதல் முனைவர் பட்டம் முதல் ஆய்வாளர் வரை பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற 1,230 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்கள் பட்டங்களை வழங்கினர்.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சுமணி, மூத்த துணை முதல்வர் ஜோதி, துணை முதல்வர்கள் கிருஷ்ணன், உபேந்திரன் மற்றும் துணைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.




0 Comments