// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** SDPI சார்பில் அபுல் கலாம் ஆசாத் கட்டுரை போட்டி - 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

SDPI சார்பில் அபுல் கலாம் ஆசாத் கட்டுரை போட்டி - 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

SDPI கட்சியின் கல்வியாளர் அணி சார்பில் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் கல்வி புரட்சி அன்றும், இன்றும் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து 300க்கு மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்வியாளர் அணியின் மாநில தலைவர் முகமது ரஃபி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்று சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.


முதலிடம் பெற்ற மாணவிக்கு பத்தாயிரம் ரூபாயும், 2ம் இடம் பெற்ற மாணவிக்கு 7000 ரூபாயும், 3ம் இடம் பெற்ற மாணவிக்கு 5000 ரூபாவும் மற்றும் 10 மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் ஆயிரம் வழங்கினார்.



இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர் அணி மாநில துணை தலைவர் வழக்கறிஞர் ஹஸ்ஸான்பைஜி கட்டுரை தேர்வாளர் ஆய்வாளர் தேவதிருவருள், மாநில செயலாளர் ஷபீக்அகமத், பாஸ்டர் மார்க், மாநில பொருளாளர் ஜமால் முகமது, கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா  நன்றியுரை வழங்கினார் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



Post a Comment

0 Comments