திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமிலுள்ள கைதி மரக்கன்றுகள் வளர்த்து தண்ணீர் அமைப்பிற்கு வழங்கினார்.
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதி இலங்கைத் தமிழர் திரு.மகேந்திரன் அவர்கள் தனி மனிதராக வளர்த்த 1,500 மரக்கன்றுகள், 5,000 ற்கும் மேற்பட்ட புங்கன் விதைகள் ஆறு சாக்குகளில் தண்ணீர் அமைப்பிற்காக வழங்கினார்.இந்நிகழ்வில் கொட்டப்பட்டு முகாம் துணை சார்பு ஆட்சியர் திருமதி ஜமுனாராணி, கண்டோன்மென்ட் துணை ஆணையர் பாஸ்கரன் , வருவாய்த்துறை ஆய்வாளர் ரவி ஆகியோர் கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை தண்ணீர் அமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினார்கள்.தண்ணீர் அமைப்பின் சார்பில் செயல்தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் அர்.கே.ராஜா, மற்றும் கலைக் காவிரி கல்லூரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற உறுப்பினர்கள் ஹரிஹரதாஸ், சதீஷ் குமார், மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் எஸ்.ஈஸ்வரன் , எம்.நரேஷ், என்.வெங்கேடஷ் , ஜெய்சூரிசிங் மற்றும் பல பங்கேற்றனர்.
புங்கன், பாதாம், அத்தி, மா, புளியமரம், கொய்யா, வேம்பு ஆகிய கன்றுகளை வழங்கிய மகேந்திரன் அவர்களை தண்ணீர் அமைப்பின் சார்பில் பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
0 Comments