NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** சொத்து வரியை உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் கோரிக்கை......!

சொத்து வரியை உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் கோரிக்கை......!

தமிழகத்தில் வரலாறு காணாத சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என்று முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்....

மாநகராட்சி நகராட்சிகளில் உள்ள சொத்துகளுக்கு 25% முதல் 150 வரை சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.... மாநகராட்சி நகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தினால் மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு தமிழக அரசுக்கு நிதி வழங்க முடியும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்த காரணத்தால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.....

தமிழ்நாடு நகராட்சி சட்டப்படி அந்தந்த நகராட்சி மாநகராட்சிகளில் உள்ள சொத்துக்களுக்கு வரியை உயர்த்துவதும் குறைப்பதும் அந்தந்த நகராட்சிகளில் மாநகராட்சிகள் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றதாகும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக மக்கள்  வருமானம் பற்றாக்குறை தற்போதுதான்  மக்கள் சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் தினந்தோறும் ஏறிவரும் வரும் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு,  சமையல் எண்ணெய்,  சிமெண்ட், கம்பி,மணல் போன்றவை அதிகரித்து வருகிறது...நடுத்தர மக்களை பாதிக்கும் வரலாறு காணாத சொத்து வரி உயர்வை தமிழக அரசு சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் மாநில பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments