வாரணாசி கியான்வாபி பகுதியிலுள்ள மசூதியின் பின்பக்க சுற்றுச்சுவரின் வெளியே ஒரு பெண் தெய்வத்தின் உருவம் இருப்பதாகவும் அங்கு தினமும் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த சிலர் வழக்கு தொடுத்தார்கள்.
இதுபற்றி பள்ளிவாசலின் சம்பந்தப்பட்ட வெளிப்புற சுற்றுச்சுவரை ஆய்வு செய்து வீடியோ எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இரு தரப்பு வழக்கறிஞர்களை கொண்ட குழுவை அமைத்தது உள்ளூர் சிவில் நீதிமன்றம். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக, பள்ளிவாசலின் உள்ளேயும் ஆய்வு செய்து வீடியோ எடுக்க முயன்றார்கள். இதை முஸ்லீம் தரப்பு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தது. பதற்றம் ஏற்பட்டதால் அன்று பள்ளிவாசலுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டது.மறுநாள் முஸ்லீம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. நிவாரணம் கிடைக்கவில்லை.அடுத்து ஏராளமான போலீசாரை குவித்து, பள்ளிவாசலுக்குள் நுழைந்து வீடியோ எடுத்தார்கள்.
பள்ளிவாசல் குளத்துக்குள் சிவலிங்கம் இருப்பதாக விஎச்பி தரப்பு அறிக்கை கொடுத்து மீடியாவுக்கும் பேட்டி கொடுத்தது. உடனடியாக பள்ளிவாசல் வளாகத்தில் யாரும் நுழையாதபடி சீல் வைக்கவும் மேற்படி சிவலிங்கத்தை பாதுகாக்கும்படியும் சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குளத்தில் சிவலிங்கம் என கூறுவது தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டி என கூறப்படுகின்ற நிலையில் இச்செயலை கண்டித்து இந்தியா முழுவதும் இஸ்லாமி அமைப்புகள் நீதி வேண்டி பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அகில இந்தியா இமாம் கவுன்சில் சார்பில் கியான்வாபி மஸ்ஜிதிற்கு நீதி வேண்டி மாவட்டத் தலைவர் கபூர்இமாம்மன்பகீ தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன உரையை மாநிலத் தலைவர் ஆபூர்தீன்இமாமத் மன்பகீ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி சபியுல்லா ஆகியோர் வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் 1991 ஆம் ஆண்டின் ஆலய வழிபாட்டின் சட்டப் பிரிவை மத்திய அரசு மதித்து நடத்த வேண்டுமென கோஷமிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் ஆபூர்தீன்இமாமத் மன்பகீ
கியான்வாபி மஸ்ஜித் 400 ஆண்டு பழமையான பள்ளிவாசல். மத வழிபாட்டு சட்டம் என்பது 1991ல் செல்வது என்னவென்றால் 1947-க்கு முன்பாக இருந்த மஸ்ஜித்கள் மஸ்ஜித்களாக பாதுகாக்கப்பட வேண்டும், இதேபோல கோயில்கள், சர்ச்கள் இருப்பதைப் போலவே மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. சங்கப் பரிவார் அமைப்பினர் கியான்வாபி பள்ளிவாசலுக்கு உரிமை கோரி வழக்கு தொடுக்கும்போது சட்டவிரோதமாக தொடுக்கப்படும் இந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்திருக்க வேண்டும். விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. இந்த வழக்கை யாருடைய அச்சுறுத்தலுக்கோ அல்லது விலை போய் இந்த வழக்கை எடுத்து இருப்பது கண்டனத்துக்குரியது வாரணாசி நீதிமன்றத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உடனே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம், மேலும்,
கியான்வாபி மசூதி விஷயத்தில் பாபரி மசூதி போல ஏமாற மாட்டோம் சட்டத்தின் மூலம் பாதுகாத்து சங்கப்பரிவார திட்டங்களை முறியடிப்போம் என தெரிவித்தார்.
0 Comments