NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** ஒருவரின் உயிரை காப்பாற்றிய திருச்சி கல்லூரி மாணவர்

ஒருவரின் உயிரை காப்பாற்றிய திருச்சி கல்லூரி மாணவர்

கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் சீரின் பானு என்ற பெண் அதிக வயிற்று வலி மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்....  அவருக்கு Ab+  என்ற ரத்தம் தேவைப்படுகிறது  என்று மருத்துவர் கூறினார்..... 

இந்த செய்தி திருச்சி ஜமால் முகமது  கல்லூரி பொருளியல் துறை தலைவர்  அவர்களுக்கு தெரியவந்தது....உடனடியாக அவனது துறையில் படிக்கும் மாணவர்களிடம் ஆலோசித்தார்.. இரண்டாம் ஆண்டு பயிலும் பொருளியல் துறை  மாணவர் முகம்மது யாரீஸ் க்கு  AB+ve  ரத்த பிரிவு என தெரியவந்தது... 

 உடனடியாக  அவர் மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்தம் வழங்கினார்.....  வயிற்று வலி ரத்த போக்கு காரணமாக அவதிப்பட்ட சீரின் பானு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார்... ரத்தம் வழங்கி ஒருவரின் உயிரை காப்பாற்றிய மாணவனுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது... இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் ரத்த தானம் பற்றி மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது..

Post a Comment

0 Comments