திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மறைந்த திரு. எம் சேகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு திருச்சி மாவட்ட சமூக நல அமைப்புகள் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் வணிகர்கள் சார்பில் நினைவு அஞ்சலி மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது....
திருச்சியின் வளர்ச்சிகாக பல போராட்டங்களை நடத்தியவர் பல திட்டங்களுக்கு வளர்ச்சி பணிகளுகளுக்கு மாநில மத்திய அமைச்சர்கள் சந்தித்து பல கோரிக்கைகளை வைத்தவர்...
திருச்சி சர்வதேச விமான நிலைய வளர்ச்சி திருச்சி மலைகோட்டை விரைவு ரயிலை மீட்டெடுக்க நடத்திய போராட்டம் திருச்சி அல்லது தஞ்சையில் Aiims மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் திருச்சி அரசு மருத்துவமனையை தரம் உயர்ந்த நடவடிக்கை எடுத்தவர். உய்யகொண்டான் ஆற்றை சீர்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்தவர் நுகர்வோர் பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் ஆலோசனை வழங்குதல் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு குழு மாணவர் மன்றத்தை ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பல சமூக பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தை வழக்குகளை தொடுத்தவர்...
குண்டூர் பெரியகுளம் மாவடி குளம் ஆகியவற்றை தூர் வாரி பயன்படுத்த நடவடிக்கை எடுத்தவர் இப்படி பல பணிகளை செய்தவர் *திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டதிற்க்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி தரும் பணிகளை கடந்த 11* *ஆண்டுகளாக மறைந்த திரு. எம். சேகரன் அவர்கள் தலைமையில் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்* *செய்தனர் இப்படி பல்வேறு சமூக பணிகளை செய்தவர் இப்போது நம்முடன் இல்லை உலகை விட்டு* *இயற்கையோடு கலந்து விட்டார் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அவர் ஆற்றிய சமூக பணிகளை நினைவு கூர்ந்தனர்...
BHEL தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் திரு. நடராஜா மூத்த பத்திரிகையாளர்கள் தி இந்து (ஓய்வு)திரு. கணபதி இன்ஸ்டா நியூஸ் திருச்சி மண்டல உதவி ஆசிரியர் திரு. பொன்னுசாமி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் தீபக் கார்த்திக்
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை வழக்கறிஞர் வடிவேல் மக்கள் சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்வழக்கறிஞர் என்.எஸ்.திலீப் ஹோப் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Dr.ஆர்.எஸ்.தினேஷ் ரெட் கிராஸ் இன்டர்நேஷனல் டிரேய்னர் Dr. லாரன்ஸ் ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ்.என். மோகன்ராம் மணப்பாறை காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் பொன். பாஸ்கரன் மணப்பாறை தஞ்சை மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் ஏ.வி செல்வம் எஸ்டிவி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் எஸ். பாலசுப்பிரமணியன் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி புதிய பாதை அறக்கட்டளை நிர்வாகி திரு.ஆர்ம்ஸ்டாரங் ரூபி நீயு லைஃப் சோசியல் வெல்வர் டிரஸ்டின் நிறுவனர் பிளட் சாம் டைட்ஸ் அமைப்பை சேர்ந்த ஷாம் சுந்தர் எகஸ்னோரா திரு. பாலு Dr.பி.ஆர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிறுவனர் எஸ் பக்கிரிசாமி டிரினிட்டி பிளஸ் டிரஸ்டின் நிர்வாகி எஸ். அருள் தடகள பயிற்சியாளர் சுரேஷ் பாபு AIPRLAO அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா சமூக ஆர்வலர் கோவிந்தசாமி சமூக ஆர்வலர் Dr.சீனிவாசபிரசாத் சமூக ஆர்வலர் மணப்பாறை ரெங்கசாமி மைக்கேல் ,பெர்னாட்,அல்லி கொடி, அனுசுயா,பிரபு, பார்த்திபன், ஹன்சிகா, பாண்டியன்,சிவா, கார்த்தி,அசோக் குமார்,ஆண்டனி மகேஷ், தர்ஷன், கிருபாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி மற்றும் மலர் அஞ்சலி செலுத்தினர் முன்னதாக நிகழ்வின் தொடக்கத்தில் அவரது நினைவாக மரகன்றுகள் நடப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மரகன்றுகள் வழங்கப்பட்டது...நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணிகளை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்*.
0 Comments