யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ரபீக் மற்றும் நிர்வாகிகள் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்...அதில், கடந்த ரம்ஜான் பண்டிகையின் போது திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் தொழுகை நடத்த அனுமதி கோரி மனு அளிக்கபட்டது
ஆனால் இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமூக வலைதளங்களில் காவல்துறையின் தடையில்லா சான்று கடிதம் பகிரப்பட்டது. தடையில்லா சான்றில் திருச்சி தில்லைநகர் காவல்துறை அதிகாரி 10.4.22ம் தேதி என கையெழுத்திட்ட்டுள்ளார். இந்த தேதியை திருத்தம் செய்து 6.4.22 என்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஆகவே தடையில்லா சான்று கடிதத்தை திருத்தி மோசடி செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்ட தலைவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments