NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் பேருந்து கவிழ்ந்து விபத்து

திருச்சியில் பேருந்து கவிழ்ந்து விபத்து

திருச்சி சிறுகாம்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. திருவானைக்கோவில் தாண்டி மாம்பழச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்தின் ஓட்டுனர் பிரேக் பிடிக்கவில்லை என கத்தியதாக கூறப்படுகிறது.


இதனிடையே எதிர்பாராத விதமாக அங்கிருந்த நடைமேடையில் பேருந்து மோதி கவிழ்ந்துள்ளது. 


அதில் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். பேருந்து கவிழ்ந்த போது அவர்கள் அனைவரும் அலறி உள்ளனர். பேருந்து கவிழ்ந்ததில் அதன் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைந்துள்ளது. அதன் வழியாக பயணிகள் அனைவரும் வெளியே வந்துள்ளனர். இதில் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்படுள்ளது அவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.  இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments