NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து "முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை திருச்சியில் துவக்கினர்.

தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து "முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை திருச்சியில் துவக்கினர்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் தனியார்  நிதி நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் இயங்கி வந்தது. இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் எங்களின் எங்கள் நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு பன்மடங்கு திருப்பி தரப்படும் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறியதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்தில்  கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தனர். ஆனால் டெபாசிட் செய்தவர்களின் முதிர்வு காலம் முடிந்த நிலையிலும், பலருக்கு பணம் திரும்பி தரப்படாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் பணம் திருப்பி கிடைக்காத ஆத்திரத்தில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள்  இந்த நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளரான ராஜா மற்றும் ரமேஷ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் தொடுத்தனர்.

இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் ஒன்று சேர்ந்து புதிதாக முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை  தொடங்கியுள்ளனர். இந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில்  இன்று நடந்தது. 

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிதா பொருளாளர் ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலிருந்து எல்ஃபின் நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பங்குதாரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு  சங்கம் செயலாளர் கவிதா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதலீட்டு செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுது அவர்கள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதனை வழிகாட்டவே இந்த சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.




தனியார் நிதிநிறுவனம் பொதுமக்களிடம் கோடிகணக்கில் பணத்தை ஏமாற்றி உள்ளனர் அதற்காக நாங்கள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினோம் தனித்தனியாக செயல்பட்டு பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம் எங்களை போலவே பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பலர் புகார் கூட அளிக்கவில்லை அவர்களுக்கு எப்படி புகார் அளிப்பது என்கிற ஆலோசனை வழங்கப்படும். எங்களுக்கான தனி விசாரணைக் அமைக்கப்பட்டுள்ளது அந்த விசாரணையை எப்படி மேற்கொள்ள வேண்டும் பலருக்கு இந்த விசாரணைக் குழு அமைத்தது தெரியவில்லை பாதிக்கப்பட்ட நபர் களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த சங்கத்தை ஏற்படுத்தி உள்ளோம்.  முழு ஒத்துழைப்பையையும் விசாரணை குழுவுக்கு அளிப்போம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.


Post a Comment

0 Comments