NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வேண்டும் திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வேண்டும் திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.  செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அலுவலகத்தில் நடைபெற்றது..


மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  பரஞ்சோதி தலைமை தாங்கினார். மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்  சிவபதி,கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அவைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ பிரிண்ட்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ இந்திரா காந்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார்,பகுதி செயலாளர்கள் சுந்தராஜ் டைமன் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


பின்னர் கட்சியில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் ஒற்றை தலைமையால் மட்டும்தான் திமுக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் மக்கள் விரும்பும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வர முடியும். அதற்கு திருச்சி வடக்கு மாவட்ட அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அனைத்து தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சேவியர் பொதுக்குழு உறுப்பினர்கள் மல்லிகா சின்னசாமி, ஜெயராம், சரோஜா இளங்கோவன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜாத்தி தியாகராஜன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments