உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான டைமண்ட்ஸ் நிறுவனம் திருச்சியில் ஷோரூமை மெகாஸ்டார் சினிமாஸ் அருகில் இன்று திறக்கப்பட்டது
ஷோரூமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, சுதிர் முகமது, நௌசாத், ஜோசப்பியூஸ், ஷேக் தாவூத் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலபார் கோல்டு 14 நாடுகளில் 419-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம். தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம் திருப்பூர், காரைக்குடி மயிலாடுதுறை. புதுக்கோட்டை மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர், செங்கல்பட்டு, கடலூர், ஒசூர் ஆகிய நகரங்களில் 33கிளைகளை கொண்டுள்ளது.




0 Comments