// NEWS UPDATE *** "விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். ஓட்டு போடும் நாளில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் விஜய்யும் வெளியே வந்து ஓட்டு போடுவார்கள். அன்றைக்கு தெரியும்.. விஜய்யை ஏன் வெளியே அழைத்தோம் என்று" -தவெக ஆண்டுவிழாவில் விஜய் *** ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய எழுத்தாளர்!

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய எழுத்தாளர்!

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரைப் பாராட்டிய எழுத்தாளர்! கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் சமூக சேவைக்கான தனிநபர் பிரிவில் மாநில அளவில் ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு பாராட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.

 


கவிஞர் மாரிமுத்து வரவேற்றார். விழாவிற்கு கவிஞர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சங்க தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார். செயலாளர் முனைவர் ஜெயலட்சுமி, பொறியாளர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், இணைச் செயலாளர் சுமித்ரா தேவி, தணிக்கையாளர் நன்மாறன், மன்ற ஆலோசகர் திலகவதி, கவிஞர் மாரிமுத்து, முகமது ஷபி, செயற்குழு உறுப்பினர் நாகப்பன், வழக்குரைஞர் கோபால்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்டி தமிழ்நாடு ஆளுநர்,‌குடியரசு தினத்தன்று தனிநபர்‌ பிரிவில் சிறந்த சமூக சேவையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த தனிநபர் பிரிவில் முன் மாதிரியான சேவை,  அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனில் கொண்ட தன்னலமற்றப் பணியைப் பாராட்டி ஆளுநர் விருதினை வழங்கினார்.  ஆளுநர் விருது பெற்ற யோகா ஆசிரியர் விஜயகுமார் அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா தம்பதியர் பணியைப் பாராட்டி திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற இணைச்செயலரும் எழுத்தாளருமான வல்லநாடன் இல கணேசன், திருமதி கல்யாணி கணேசன் இருவரும்  பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். நிறைவாக விமலா நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments