// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்தும், காவிரியில் உரிய பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தும் மேகதாது நோக்கி நடைபயணம் - தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அறிவிப்பு !

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்தும், காவிரியில் உரிய பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தும் மேகதாது நோக்கி நடைபயணம் - தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் அறிவிப்பு !

சுற்றுச் சூழலை நாசமாக்கும் வகையிலும், தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை காவு கொடுக்கும் வகையிலும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், தமிழகத்தின் குடிநீர் ஆதாரமான காவிரியில் பெங்களூர் நகர் பகுதியின் கழிவு நீர் கொட்டப்படுவதை நிறுத்தக் கோரியும், 

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வனப்பகுதியில் மூன்று அப்பாவி தமிழர்கள் மான் வேட்டை என்கிற பெயரில் சுட்டுக்கொன்ற அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும். உச்சநீதிமன்றம். காவிரி நடுவர் மன்றம். காவிரி மேலாண்மை ஆணையம் இவற்றின் எவ்வித உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும்.  தமிழக முதல்வர்  ஜோசப் விஜய் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்யும் கன்னடர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும்,

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் எதிர்வரும் 01.09.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் மேகதாது நோக்கி நடைபயணம் தொடங்க உள்ளது. இந்த நடை பயணத்தில் தமிழகத்தின் முக்கிய தலைவர்களும் பங்கேற்ற உள்ளனர் என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் கே.எம்.சரீப் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments