உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு ஜமால் முகமது கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில் இன்று கடல் பாதுகாப்புப் பராமரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியை கல்லூரியின் செயலர் & தாளாளர் காஜா நஜீமுதீன், பொருளாளர் ஜமால் முஹம்மது, முதல்வர் இஸ்மாயில் முகைதீன். உதவிச் செயலர் முனைவர். அப்துஸ் சமது. திருச்சி தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் நீலமேகம், திருச்சி தண்ணீர அமைப்பின் செயலாளர் பேராசிரியர் சதீஸ்குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கிக் கொடியசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தனர்.இப்பேரணியானது விழிப்புணர்வுப் பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவண்ணம் கல்லூரி வளாகத்தில் இருந்து TVS டோல்கேட் ரவுண்டானா வரை சென்றது.
பேரணியில் 'மாணவர்கள் கடல் வளம் காப்போம் பூமிப்பந்தை காப்போம், கடல்சார் வளங்களே உயிர்களின் ஆதாரம்,
நெகிழிக் குப்பைகளை வீசாதே, கடல்வளங்களை சிதைக்காதே,
கடல் வளம் பாதுகாப்பு, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு, கடலை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகளின் தூய்மையை பேணுதல் முதலான கருத்துகளை முழக்கமிட்டவாறு மாணவர்கள் சென்றனர். பேரணியின் முடிவில் "கடல் நீரைப் பாதுகாப்போம்! கடல் வளம் பேணுவோம்!" என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.
தண்ணீர் அமைப்பின்செயற்குழு உறுப்பினர் திரு.ஆர்.கே..ராஜா. கே.கே நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.என்.வீரசிங்கம், . பாபு தாமஸ், கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் முகம்மது இப்ராஹிம், பகுதியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.ஷேக் இஸ்மாயில், கலைப்புல முதன்மையர் முனைவர் ஏ.சையத் ஜாகீர் ஹசன். தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர்.T.செல்வராசு. தண்ணீர சுற்றுச் சூழல் மாணவர் மன்ற மாணவர்கள், மற்றும் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
0 Comments