திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் இமானுவேல். இவரது மனைவி லில்லி புஷ்பம். சாமுவேல் நீலமேகம் என்பவருக்கு மூன்று மனைவிகள் உள்ளன. முதல் மனைவியின் பெயர் சின்னம்மாள் இரண்டாவது மனைவியின் பெயர் எஸ்தர் பிரபா. சாமுவேல் நீலமேகம் இறந்துவிட்டார். இவருக்கு 100 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இவர்களுக்குள் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த சொத்துக்கும் முதல் தாரத்து மனைவி சின்னம்மாள் என்பவர் மகள் லில்லி புஷ்பம் என்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி வெற்றி பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இம்மானுவேல் அவரது மனைவி லில்லி புஷ்பம் ஆகியோருக்கு சொந்தமான சர்ச் மீது எஸ்தர் பிரபா மகன்கள் தூண்டுதல் பெயரில், அவர்களது உறவினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக முதல் தாரத்து மகள் லில்லி புஷ்பம், மகன் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் முறையான நடவடிக்கையை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் லில்லி புஷ்பம் என்பவர் முதல் தாரத்து மனைவியின் மகள் இல்லை எனவும் அவர் வளர்ப்பு மகள் எனவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
100 கோடி ரூபாய் சொத்தை முறையாக பிரித்துக் கொடுத்து சமாதானம் ஆகி கொள்ளலாம் என கூறி வெற்றி பேப்பரில் என்னிடம் கையெழுத்து பெற்று, தற்போது அந்த பேப்பரில் லில்லி புஷ்பம் என்பவர் வளர்ப்பு மகள் என பொய்யான தகவலை அதில் தெரிவித்து நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் புகார் மனுவை நாங்கள் தாக்கல் செய்து உள்ளோம். மேலும் எனக்கு சொத்தை பிரித்து வாங்குவதில் எந்த விருப்பமும் இல்லை. மேலும் முதல் தாரத்து மனைவியின் மகளான லல்லி புஷ்பம் என்ற என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தன்னை தனது அப்பாவிற்கு மகளே இல்லை என்ற கோணத்தில் தவறான தகவல்களை பரப்புகின்றனர். லில்லி புஷ்பம் என்பவரை வீட்டில் நாயை வைத்து கடிக்க வைத்துள்ளனர். மேலும் தனது மகன் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும், சர்ச் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியை திருச்சி மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சாமுவேல் நீலமேகம் முதல் தாரத்து மனைவியின் மகள் லில்லி புஷ்பம் கொடுத்த பேட்டியில் கூறும்போது..,
எனது தந்தையின் இரண்டாம் தாரத்து மனைவி எஸ்தர் பிரியா என்பவர் மகனான ஏனோஸ் என்பவர், தாங்கள் அவரை தாக்கிவிட்டதாகவும் இதனால் அவருக்கு கை உடைந்ததாகவும் பொய்யான புகார் கூறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அது முற்றிலும் தவறானது அவர் தற்போது மருத்துவமனையில் கையில் எந்தவித அடிபட்டதற்கான அடையாளமும் இல்லாமல் சாதாரணமாக படுத்து உறங்கி வருகிறார். அதற்கான புகைப்படம் வீடியோவும் இருக்கிறது. மேலும் தனது தந்தைக்கு நான் மகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் எனக்கு எந்த சொத்தும் பணமும் வேண்டாம். ஏனோஸ் வீட்டில் இருந்த நாயை வைத்து என்னை கடிக்க வைத்துள்ளனர். அதற்காக நான் சிகிச்சை பெற்று வருகிறேன். எங்களுக்கு அரசியல் சம்மந்தமாக எந்த தொடர்பும் இல்லை. எனது கணவர் சமோசா கடை நடத்தி வருகிறார். மேலும் எனது மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து சர்ச் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
0 Comments