// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் மை ஊற்றி எழுதும் பேனா (இன்க் பேனா) ஒரு நிமிடத்தில் 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை முயற்சி.


கோவை மாவட்டம், கோவை புதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி புதிய  உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.அதன் படி பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பால் பாயிண்ட் பேனா எனும் பிளாஸ்டிக் ரக பேனாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மை ஊற்றி எழுதும் பேனாவை பயன்படுத்தி 1330 திருக்குறளை ஒரு நிமிடத்தில் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இணைந்து எழுதி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.. 

இது குறித்து பள்ளி நிர்வாகி கௌரி உதயேந்திரன் கூறுகையில்,பள்ளி மாணவர்களிடையே மை ஊற்றி எழுதும் பேனாவில்  எழுதுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த சாதனை நிகழ்வை நடத்தியதாக தெரிவித்தார்.. மாணவர்களின் இந்த சாதனை தாய்த்தமிழ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.


கோவை நிருபர் கோபிநாத்.

Post a Comment

0 Comments