BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

நுகர் பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் ரேஷன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மண்டல பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.


தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மண்டல பொதுக்குழு கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மண்டல தலைவர் வேலு தலைமை ஏற்க, செயற்குழு உறுப்பினர் சின்னையன் வரவேற்பு ஆற்றினார்.  மாநில பொருளாளர் ஏழுமலை, சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் மண்டல துணைத்தலைவர்கள் வடிவேலன், சண்முகவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர் நாகேஷ்  மண்டல செயலாளர் ராசபப்ன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.‌ இந்த மண்டல பொதுக்குழு கூட்டத்திற்கு கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-



 நுகர் பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் ரேஷன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சியை கைவிடக் கோரியும்,நுகர் பொருள் வாணிப கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது இதனால் அங்காடிகள், கிடங்குகள் அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில் பணிகள் தேக்கம் அடைகிறது




எனவே நடைமுறையில் உள்ள 12(3) ஒப்பந்தத்தின்படி பருவகால பணியாளர்களை கொண்டு காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும்,  திருச்சி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எரிவாயு விநியோகம் செய்யும் பணியில் சுமார் 13 ஊழியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக சொற்ப கூலியில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு திருச்சி மாவட்ட தொழிலாளர் நல ஆணையம் வழங்கிய நிரந்தர படுத்த கோரிய உத்தரவினை கூட அமல்படுத்தவில்லை. எனவே இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை இடைக்கால நிவாரணமாக வழங்க கோரியும், தற்போது புதிதாக உருவாக்கப்பட உள்ள மண்டல அலுவலகங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியக்கூடிய மேலாளர்களை பணி அமர்த்த கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வில்லை என்றால் வருகிற ஆகஸ்ட் மாதம் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் திருப்பூரில் நடைபெற உள்ள 8-வது மாநில மாநாட்டில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.



Post a Comment

0 Comments