BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** இந்த வருடத்திற்குள் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - ஒமேகா ஹெல்த் கேர் நிறுவன நிர்வாகி பேட்டி

இந்த வருடத்திற்குள் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - ஒமேகா ஹெல்த் கேர் நிறுவன நிர்வாகி பேட்டி

ஒமேகா ஹெல்த் நிறுவனம் ஹோப் பவுண்டேஷன், உன்னத்தி கல்வி அமைப்பு ஆகியவை இணைந்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பான கூட்டம் திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 



சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர் ஹிஸ்மத்பானு கலந்துகொண்டு முதன்மை திறன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கண்ணன் சுதந்திரராமன்,மற்றும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் சுனந்தா ரெங்கராஜர்,ஹோப் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி இயன்கொரியா.மற்றும் உன்னத்தி கல்வி அமைப்பின் நிர்வாகி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் இதுவரை இந்த அமைப்பின் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை  பெற்று பலன்  அடைந்த மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.தொடர்ந்து ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கண்ணன் சுதந்திர ராமன்.மற்றும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் சுனந்தா ரெங்கராஜர்.ஹோப் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி இயன்கொரியா.மற்றும் உன்னத்தி கல்வி அமைப்பின் நிர்வாகி ரமேஷ் ஆகியயோர்  கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்


ஒமேகா நிறுவனத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, சுகாதாரம். பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் கருத்தில் கொண்டு 2025 ஆம் வருடத்திற்குள்  வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களது எண்ணம். அதில் பத்தாயிரம் பேருக்கு திறன் மேம்பாடு வழங்கவுள்ளோம். 2025-க்குள் சுமார் 38 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனை பெறுவதற்குறிய  திறன் இல்லை என்பதை ஒரு கணக்கீடு கூறுகிறது. திருச்சியில் ஒமேகா ஹெல்த் கேர் உள்ள நிலையில் தமிழகத்தில் திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் இதனை  நாங்கள் கருத்தில் கொண்டு திருச்சியில் செயல்படுத்தி  வருகிறோம். இதுவரை 

உன்னத்தி அமைப்பு மூலமாக ஹோப் பவுண்டேஷன் மூலமாக சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கியுள்ளோம். இந்த வருடத்திற்குள் சுமார் 3000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கவுள்ளோம். இந்த பயிற்சி முகாம் திருச்சியில் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. நாளை தரங்கம்பாடியில் பயிற்சி முகாம் துவக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் அடுத்த  5ஆண்டுகளில் எங்கெல்லாம் தமிழகத்தில் வாய்ப்பு 

உள்ளதே அந்த இடங்கள் தோறும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க உள்ளோம். இந்த பயிற்சி மையம் மூலமாக அவர்கள் திறனை மேம்படுத்துவது  மட்டுமல்ல அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை 6மாதம் வேலை உள்ள சவால்கள் இடர்பாடுகளை குறித்தும் கண்காணித்தும் வருகிறோம் என தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments