BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** மதுபான கடை அகற்றக்கோரி சமூக நீதிப் பேரவை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

மதுபான கடை அகற்றக்கோரி சமூக நீதிப் பேரவை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சி  மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு அரியாவூர் ஊராட்சி பகுதியில் அல் அமீன் நகர்,  குலாம் அலிகான் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்...

இந்த பகுதி திருச்சி சோமரசம்பேட்டை  வழியாக தோகைமலை செல்லும் சாலையில் அரியாவூர் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது.. அரியாவூர் ஒத்தகடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அல் அமீன் நகர் செல்லும் வழியில் அரசு மதுபான கடை (கடை எண் 10406) தோகைமலை சாலையில் உள்ளது. 

மேற்படி மதுக்கடை சாலையில் அமைந்துள்ளதால் இங்கு வரும் குடிகாரர்கள் மது கடையை சுற்றியுள்ள பகுதிகளில் அமர்ந்து குடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி செல்லும் பெண்களை தகாத வார்த்தைகளில் பேசி கிண்டல் செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் செய்து வருகின்றனர்..பலமுறை டாஸ்மாக் நிர்வாகத்திடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்தும் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை... 



இரவு நேரங்களில் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் சாராயம் வாங்கிவிட்டு குடிப்பதற்காக தெருக்களில் உள்ள வீட்டு வாசல்களிலும் காவிரி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து அதே இடத்தில் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டிலை பெண்கள் தண்ணீர் பிடிக்கும் குழாய் அருகே வீசிவிட்டும் உடைத்த்து விட்டும் செல்கின்றனர்



 மாலை நேரங்களில் தண்ணீர் பிடிக்க யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. அல் அமீன் நகர் பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் அறியாவூர் ஒத்தக்கடை பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்வதால் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகிறது..எனவே அரசு மதுபான கடையை அகற்றுமாறு சமூகநீதி பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது..

Post a Comment

0 Comments