NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற "பிளாஸ்டிக் கேரிபேக் ஒழிப்பு நாள்" விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

திருச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற "பிளாஸ்டிக் கேரிபேக் ஒழிப்பு நாள்" விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் மற்றும் சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் பிளாஸ்டிக் கேரி பேக் ஒழிப்பு நாள் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. 


இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட கூடுதல் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (CWC) குத்தாலிங்கம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தென்னிந்திய ரோல் பால் ஸ்கேட்டிங்  செயலாளர் சுப்பிரமணி, திருவாரூர் மாவட்ட ரோல் பால் தலைவர் சரவணன், சாய் ஜி ரோல் பால் அகாடமி செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் டைம் கிட்ஸ் மழலையர் பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



முன்னதாக இந்த பிளாஸ்டிக் கேரிபேக் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியானது திருச்சி கே கே நகர் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி உடையான் பட்டி பகுதியில் உள்ள சாயி ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகடாமி வரை நடைபெற்றது.




 இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியில் 30க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பொது மக்களிடையே பிளாஸ்டிக் கேரி பேக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வாசகங்கள் அடங்கிய பதவிகளை ஏந்தியும், பிளாஸ்டிக் கேரி பேக் எதிராக கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.

Post a Comment

0 Comments