BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** அனாதை பிணங்களுக்கு சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்யும் தம்பதியர்

அனாதை பிணங்களுக்கு சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்யும் தம்பதியர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புத்தூர் பகுதியில்  வசித்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார் இவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா  விஜயகுமார் இருவரும்  சகிதமாக அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகின்றனர். 

இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை என்பது இன்றும் கூட பல விஷயங்களில் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. பெண்கள் சில கோவில்களுக்கு செல்லக்கூடாது, சில கடவுளை வணங்கக்கூடாது, சில இடங்களுக்கு செல்லக்கூடாது என பெண்களுக்கான கட்டுப்பாடுகள் இன்றும் நடைமுறையில்  இருக்கிறது.  பெண்கள்  இறுதிச்சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.


பெண்கள் இறுதிச்சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதையோ, ஏன் பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வது கூட இல்லை.

 பழங்காலம் முதலே பெண்கள் இறுதிச்சடங்குகளை பொறுத்த வரையில் அழுவதுடனும், சில சடங்குகளை செய்வதுடனும் பெண்களின் வேலை முடிந்துவிடுகிறது  சுடுகாட்டிற்கு வரவோ, கொள்ளி வைக்கவோ பெண்களுக்கு பழங்காலம் முதலே அனுமதிக்கப்படுவதில்லை. 

 
பெண்கள்  வலிமையானவர்கள் அவ்வகையில். அனாதையாக இறப்பவர்களை ஜாதி,மத, இன வேறுபாடின்றி கணவருடன் சம்பந்தப்பட்ட சரக காவல் துறையினர் முன்னிலையில் அனாதை பிரேதங்களை தூக்கி சென்று  வாய்க்கு அரிசியிட்டு பால்தெளித்து மலர்மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்கின்றனர்.



வீடுவரை உறவு வீதி வரை மனைவி,காடு வரை பிள்ளை,கடைசி வரை யாரோ என்பர்

பெற்ற பிள்ளைகள் உற்றார் உறவினர் சுற்றத்தார்  இல்லாவிடினும்

பெற்ற பிள்ளைகள்

உற்றார் உறவினர்

 செய்ய வேண்டிய இறுதிசடங்கினை

ஆதரவற்ற,அனாதை பிரேதங்களுக்கு 

உடன்பிறவா சகோதர, சகோதரியாய் முன்னின்று இறுதிசடங்கினை

செய்து நல்லடக்கம் செய்து வருகின்றனர் திருச்சி தம்பதியர்!

Post a Comment

0 Comments